உள்ளூர் செய்திகள்
- புகை மூட்டம் காணப்பட்டது
- 1 மணி நேரம் போராடி அணைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் திடிரென தீ பற்றி மளமளவென எரிகிறது தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
நாட்டறம்பள்ளி தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து குவிக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்து, புகை மூட்டம் காணப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீர் பீசி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர்.