குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தும் கணவர் மீது கடும் நடவடிக்கை
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- புகார் அளித்த பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களை நேரில் அழைத்து ஆலோசனை
திருப்பத்தூர்:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் இமை கள் திட்டத்தின் பகுதியாக குடும்ப வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண்களுக்கும் மற்றும் அவர்களின் கணவர்களுக் கும் ஆலோசனை வழங்கும் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இந்த மாதம் முழுவதும் குடும்ப பிரச்சினை காரணமாக 100, 1098 உதவி எண்ணில் புகார் அளித்த 20 பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களை நேரில் அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவானது திருமணமான மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம் பந்தமாகவும் செயலாற்றும். மேலும் குடிகார கணவரால் துன்புறுத்தல் என்ற புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.