உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே அரசு பள்ளி மேல்தளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை மாணவர்கள் அகற்றிய காட்சி.

அரசு பள்ளி மேல் தளத்தில் தேங்கிய மழைநீர்

Published On 2023-11-30 07:51 GMT   |   Update On 2023-11-30 07:51 GMT
  • மாணவர்கள் மூலம் அகற்றம்
  • கனமழை பெய்ததன் காரணமாக தேங்கியது

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உள்ள பழைய கட்டிடங்களை புதுப்பிப்ப தற்காக தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று கனமழை பெய்ததன் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற கட்டிடத்தின் மீது மழை நீர் தேங்கியது.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் உத்தரவின் பேரில் கட்டிடத்தில் தேங்கிய மழை நீரை மாணவர்கள் அகற்றினர்.

இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது:-

கட்டிடத்தின் மேல் தளத்தில் மழைநீர் தேங்கினால் கட்டிடம் சேதமடைந்து விடும் இதனால் மழை நீரை அகற்றியதாக தெரிவித்தார்.

பள்ளி கட்டடத்தின் மேல் தளத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மழை நீரை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News