கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை பொருட்கள்
- ஜோலார்பேட்டை பகுதியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை எஸ் கோடியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஜோலார்பேட்டை வட்டார அளவிலான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரிய குமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சி.கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஜோலா ர்பேட்டை நகர கழக செயலாளர் ம.அன்பழகன், மத்திய ஒன்றிய செயலாளர் உமா கன்ரங்கம், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.