உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து கிடப்பதை காணலாம்.

ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் காயம்

Published On 2022-09-14 09:44 GMT   |   Update On 2022-09-14 09:44 GMT
  • குடி போதையில் இருந்த டிரைவருக்கு தர்ம அடி
  • பெற்றோர்கள் அச்சம்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன் ராஜன் தெருவில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது.

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வழக்கமாக ஆட்டோவில் அழைத்து வருவது வழக்கம் அதன்படி நேற்று பள்ளி முடிந்தவுடன் திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்த பஷீர் (வயது 30).

பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு பெரியகடை தெருவுக்கு வந்தார். எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை வளைத்த போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆட்டோவில் பயணம் செய்த திருப்பத்தூர் வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவில் சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர்.

ஆட்டோவை ஓட்டி வந்த பஷீர் குடிபோதையில் இருந்ததாக கூறி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக பஷீர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ -மாணவிகளைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News