நாட்டறம்பள்ளி அருகே கள்ளியூர் பகுதியில் பொது வழியில் கம்பி வேலி அகற்றப்பட்டதை படத்தில் காணலாம்.
பொதுவழியில் தனிநபர் அமைத்த கம்பி வேலி அகற்றம்
- 2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சணைக்கு தீர்வு
- பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளியூர் கிராமத்தில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அந்தபகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை, தனிநபர் ஒருவர் தனக்கும் சொந்தமான இடம் எனக்கூறி பாதையில் கம்பிவேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊர் பெரியோர்கள் பேசியும் கூட கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சணைக்க தீர்வு காண முடியவில்லை.
இதனால் அந்தவழியாக செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து முற்றிலும் தடையானது.
இதுகுறித்து கிராம மக்கள், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் பொது வழி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.
அதன்பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர்.
மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
அந்த இடம் வருவாய்த்துைறக்கு சொந்தமானது என தெரிந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் தனிநபர் அமைத்திருந்த கம்பி வேலியை அகற்றினர்.
2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சணைக்கு தீர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.