உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த தரைப்பாலத்தில் இறங்கி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

சேதமடைந்த தரைப்பாலத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-03-20 09:52 GMT   |   Update On 2023-03-20 09:52 GMT
  • ஆபத்தான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு
  • விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கத்தாரி செல்லும் சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலம் வழியாக மல்ல குண்டா, கத்தாரி. பள்ளத்தூர். மணியாகர்வட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் இவ்வழியாகதான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் தரைப்பாலம் சேதம் அடைந்தது.

எனவே இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு ஆபத்தான நிலையில் கடந்த செல்கின்றனர்.

தரைப்பாலத்தை சீர மைக்க அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உடைந்த தரை பாலத்தின் பள்ளத்தில் இறங்கி நின்று பாலத்தை சீரமைக்கவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News