உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மரக்கன்றுகள் உற்பத்தி

Published On 2023-08-31 15:07 IST   |   Update On 2023-08-31 15:07:00 IST
  • 6 ஆயிரம் கன்றுகள் தயாராக உள்ளன
  • விதைகள் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளிடம் இருந்து இலவசமாக கொள்முதல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நர்சரி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு பசுமை வளாகங்களாக மாறி வருகிறது.

இந்த மாவட்டத்தில் மொத்தம் 114 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.தற்போது 15 பள்ளிகளில் நர்சரி தோட்டங்கள் தொடங்கப்பட்டு, கடந்த சில வாரங்களில் சுமார் 6,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற நகரங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் போன்ற இதர பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றில் பெரும்பாலானவை பழம்தரும் மரங்கள், இந்த மரக்கன்றுகளுக்கான விதைகள் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளிடம் இருந்து இலவசமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும் தோட்டத்தின் ஒரு பகுதியில் நாட்டு மரங்களான வேம்பு, மந்தாரை, புன்னை, அரசமரம், கொய்யா, ரோஸ்வுட், இழுப்பை, வேம்பு, புளி, , பைப்பல், ஜாமுன் மற்றும் மா உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றது.

இந்த தோட்டங்களில் உள்ள செடிகள் மற்றும் மரங்களுக்குமாணவர்கள் தங்கள் இடைவேளையின் போதுதண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

பள்ளிகளில் மரக்கன்று களை வளர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்து வத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

அனைத்து பள்ளிகளிலும் நர்சரி தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் வறண்டு காணப்படக்கூடிய கந்தலி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பரப்பு பரப்பை அதிகரிக்க முடியும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News