உள்ளூர் செய்திகள்

விபத்தில் நொறுங்கிய கார், பஸ்.

தனியார் பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்

Published On 2022-07-25 14:50 IST   |   Update On 2022-07-25 14:50:00 IST
  • தம்பதியினர் படுகாயம்
  • 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூரில் இருந்து நேற்று மாலை சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஜோலார்பேட்டை அடுத்த ராமனூர் அருகே முதலை மடுவு என்ற இடத்தில் சென்ற போது ஆம்பூர் பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு ஊராட்சி ஜலகாம்பாறை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பாக்யராஜ் (வயது 40), இவரது மனைவி பரிமளா (வயது 34) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தின் அருகே பஸ் கவிழாமல் பஸ் டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பஸ்சில் பயணம் செய்த சுமார் 60 பயணிகள் எந்த வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் விபத்தின் போது பயணிகள் கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் அரசு, காதர் கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த தம்பதியினரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News