அரசு அதிகாரிகள் வாகனத்தை சிறை பிடித்து போராட்டம்.
கோவில் இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு
- அதிகாரிகள் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி வாக்குறுதி
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்தவடகரை ஊராட்சி பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு அருகில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தாசில்தார் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் அங்கு பணியை தொடங்குவதற்காக பொக்லைன் எந்திரம் வந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் இந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டக்கூடாது என்று தெரிவித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை திரும்பி அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பர்ப்பரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.