உள்ளூர் செய்திகள்

ரெயில்வே மேம்பாலம் பணி மாற்று பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-06-29 14:26 IST   |   Update On 2023-06-29 14:26:00 IST
  • ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைகிறது
  • ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து அகற்றினர்.

ரெயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் திருப்பத்தூர் - நாட்டறம்பள்ளி செல்ல தற்காலிக மாற்றுவழி அமைப்பது குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அருணா, மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை உட்பட வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News