உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

Published On 2023-08-06 13:08 IST   |   Update On 2023-08-06 13:08:00 IST
  • வெகுமதி மற்றும் சான்றிதழை வழங்கினார்
  • உருக்குலைந்து நிலையில் இருந்த உடலை சுரண்டி எடுத்து வாளியில் சேகரித்தார்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முனிரத்தினம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் நடந்த சாலை விபத்தில் வடமாநில இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

மேலும் மே மாதம் மல்லப்பள்ளி பகுதியில் இளைஞர் ஒருவரின் மீது தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பல வாகனங்கள் ஏறியதால் அடையாளம் தெரியாத வகையில் உடல்கள் உருக்குலைந்து நிலையில் இருந்தது கண்டு உடலை சுரண்டி எடுத்து வாலியில் சேகரித்தார்.

இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலையில் நசுங்கி கோரமாக காணப்பட்ட உடல்களை சிறிதளவும் தயக்கமின்றி முகத்தை சுழிக்காமல் கடமை மனப்பான்மையுடன் திடமாக பணியாற்றி சாலையில் இருந்து அகற்றியதைப் பாராட்டி திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

Tags:    

Similar News