நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் இரவில் முற்றுகை
- தெருவிளக்குகள் எரியாததால் ஆத்திரம்
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு பகுதியில் கச்சேரி தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளது. இங்கு பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் இந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதற்கு பயப்படுகின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி அலுவல கத்திற்கு புகார் தெரிவித்தும் மின்விளக்கு எரிவதற்கு நடவ டிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு நகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகரமன்ற உறுப்பினர் சுபாஷ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.