உள்ளூர் செய்திகள்
பாம்பு கடித்து கூலி தொழிலாளி சாவு
- வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள கதவாலம் ஊராட்சி சேர்ந்த அப்துல் சலீம் (வயது 45) கூலி தொழிலாளி.
இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷப் பாம்பு கடித்தது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த அவர் அதிகாலை இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.