உள்ளூர் செய்திகள்

மண் கடத்திய ஜே.சி.பி. லாரி பறிமுதல்

Published On 2023-07-07 15:58 IST   |   Update On 2023-07-07 15:58:00 IST
  • போலீசாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்
  • டிரைவர்களை தேடி வருகின்றனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஊசி நாட்டான் பட்டம் பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி ஜேசிபி எந்திரம் மூலம் லாரியில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ரகசிய தகவல் கிடைத்தது.

எஸ்.பி. உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்தப்படுவது தெரியவந்தது.

அப்போது கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

பின்னர் போலீசார் லாரி மற்றும் ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 35) மற்றும் லாரி டிரைவர் சின்னா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேதுராமன் (30) ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News