உள்ளூர் செய்திகள்

பள்ளியில் சட்டமன்ற குழு ஆய்வு செய்த காட்சி.

ஏலகிரி மலையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்

Published On 2022-08-27 16:22 IST   |   Update On 2022-08-27 16:22:00 IST
  • சட்டமன்ற குழு அறிவுறுத்தல்
  • படகு குழாமில் ஆய்வு செய்தனர்

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலை மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெறும் பல்வேறு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதார துறை மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் செயல்பாடுகளையும் வளர்ச்சி திட்ட பணிகளையும் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் ‌ செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினர்கள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் பிரகாஷ், ராஜா, வேல்முருகன், உள்ளிட்ட18 பேர் அடங்கிய குழுவினர் ஏலகிரி மலை மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்ற வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

மேலும் ஜோலார்பே ட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி அத்தனாவூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் நடைபெற்று வரும் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும், அத்தனாவூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்து சாலை பணிகள் தரமானதாக இருக்கிறதா என்பதை அளவீடு செய்து பார்வையிட்டனர்.

மேலும், ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் கிராமத்தில் பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்ள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் கலந்துரையாடி விடுதியில் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்து, மின்சாரம் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, தமிழக அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும், அனைத்து கல்வி உதவிகளையும் பெற்று மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயின்று தேர்வில் வெற்றியடைய வேண்டுமென மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்

மேலும், அதேபகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அத்தனாவூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அமைக்கப்பட்டு தனிநபர் கிணற்றையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.17.80 இலட்சம் மதிப்பீட்டில் என்பவர் அரசின் மானியம் ரூ.8.90 இலட்சம் மானியமாக பெற்று 50 சென்ட் நிலத்தில் கொய்மலர், ரோஜா சாகுபாடி பசுமை குடில் அமைத்து, வளர்க்கப்பட்டு வரும் ரோஜா தோட்டத்தை பார்வையிட்டு, ரோஜா சாகுபடி செய்யும் விதம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஏலகிரிமலை படகு இல்லத்தை குழுவினர் பார்வையிட்டு நவீனபடகு குளத்தை சீரமைத்து வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்யவும், அந்நிய செலாவனியை ஈட்டும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், படகு இல்லம் அருகிலுள்ள பழைய கழிவறையை அகற்றி நவீன கழிவறை அமைக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைவழங்கினர்.

மேலும் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தில் வேளாண்மை -உழவர் நலத் துறையின்சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மழைத்தூவானை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினார்கள்.

தொடர்ந்து, ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு, மருந்துகள் இருப்பு, நோயாளிகளின் வருகை பதிவேடு, சிகிச்சை முறைகள் குறித்தும், கேட்டறிந்து, மருந்து இருப்புகள் குறித்த பதிவேடு முறையாக பராமரிக்காததை குறித்து இணை இயக்குநர் அவர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா.வில்சன் இராசசேகர், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவர்கள் தினகரன், முருகேசன். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ், கே.சதிஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News