உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற காட்சி.

சுதந்திர தின விழா மாரத்தான் ஓட்டம்

Published On 2022-08-13 09:20 GMT   |   Update On 2022-08-13 09:20 GMT
  • தேச ஒற்றுமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை:

சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு போன்றவற்றை நாடு முழுவதும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதனால் இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், தேச ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சுதந்திர நாளில் நினைவு கூறும் வகையில் பொது மக்களுக்கு பாதுகாப்பு குறித்தும், தேச ஒற்றுமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று ெரயில் நிலையத்திலிருந்து மாரத்தான் மூலம் தேசிய ஒற்றுமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ெரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி தேசிய ஒற்றுமை குறித்த மாரத்தான் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்க விளையாட்டு வீரர்கள் 40 பேர் பங்கேற்று ஜங்ஷன், வக்கணம்பட்டி, கோடியூர், இடையம்பட்டி வழியாக மீண்டும் ெரயில் நிலையம் வந்தடைந்து மாரத்தான் பேரணியை நிறைவு செய்தனர்.

மேலும் இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியின் போது ெரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், டிஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், அசோக் குமார் உள்ளிட்ட ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News