திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
- மேடை அமைக்கும் பணி ஆய்வு
- உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் வருகிறார்.
கொடியேற்றுதல், அரசு கட்டிடங்கள் திறந்து வைத்தல், பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனால் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலவாடி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கப்படவுள்ளது.
இந்த இடத்தினை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கு விழா மேடை அமைக்கும் பகுதி மற்றும் பொதுமக்கள் அமரும் இருக்கைகள், வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளிட்டவைகள் குறித்து கலந்தாய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர்கள் சிவப்பிரகாசம், குமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம. அன்பழகன், மதிய ஒன்றிய செயலாளர் க. உமாகன்ரங்கம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.