உள்ளூர் செய்திகள்

மராட்டிய மாநில விவசாயி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Published On 2023-08-30 15:50 IST   |   Update On 2023-08-30 15:50:00 IST
  • மனநலம் பாதித்திருந்தவர் குணமடைந்தார்
  • கலெக்டர் முன்னிலையில் நடவடிக்கை

திருப்பத்தூர்:

வாலாஜா பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் திரிந்து கொண்டிருந்த ஒருவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதித்தவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

அவருக்கு அங்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை மற்றும் மருத்துவத்தினால் நினைவு திரும்பியது. அப்போது அவர் பெயர் அங்குலு (வயது 51) என்பதும், மராட்டிய மாநிலம், கடிச்சோர்லி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரி வித்து திருப்பத்தூருக்கு வரவழைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் அவரது குடும்பத்தாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் கொ.மாரிமுத்து, மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News