உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை கலெக்டர் அமர்குஷ்வாஹா எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, மதியழகன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்
- கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23 ம் ஆண்டு அரைவைப்பருவ துவக்க விழா இன்று நடந்தது.
நிர்வாக குழு தலைவர். ஏ.ஆர் ராஜேந்திரன் வருவாய் அலுவலர் மேலாண்மை இயக்குனர் மீனா பிரியா தரஷினி, துணைத் தலைவர் சி.செல்வம் ஆலை அரைவைக்கான பூஜை நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் அமர் குஷ்வாஹா எம்எல்ஏக்கள். தேவராஜ், நல்லதம்பி, மதியழகன்ஆகியோர் கந்துக்கொண்டு ஆலை அரைவையை தொடங்கி வைத்தனர்.
இந்த 2022-23ம் ஆண்டு அரைவைப்பருவத்தில் 1,30,000 மெட்ரிக்டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.