உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
- பூச்சி மருந்தை குடித்தார்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). விவசாயி. மனைவி திலகவதி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கணவனை பிரிந்து 2 ஆண்டுகளாக திலகவதி தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனால் சண்முகம் மன உளச்சலில் காணப்பட்டார். மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த சண்முகம் கடந்த 18-ந் தேதி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் மயங்கி கிடந்த வரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சண்முகம் பரிதாபமாக இறந்தார்.