தி.மு.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- தளபதி அறிவாலய திடலில் நடந்தது
- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலய திடலில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய கழக செயலாளர் மற்றும் வி.எஸ்.ஞானவேலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கணல் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஒன்றிய நிர்வாகிகள் எம்.சி. ராமநாதன், வி.ஜி.அன்பு, ஷோபா வெங்கடேசன், லட்சுமி பொண்ணம்பலம். ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி மகேந்திரன், பாமிதா ஆசிப், ஊராட்சிமன்ற தலைவர் ஈச்சங்கால் ஏழுமலை, முருகன், செல்வம், பள்ளிபட்டு செல்வம், மெக்கானிக் நாகராஜ், பத்தாப்பேட்டை ஜெயராமன், கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.