உள்ளூர் செய்திகள்

ஏலகிரி ஏரியில் செத்து கிடக்கும் மீன்கள்

Published On 2023-09-14 15:38 IST   |   Update On 2023-09-14 15:38:00 IST
  • பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
  • மக்களுக்கு ஆட்டோ மூலம் எச்சரிக்கை

ஜோலார்பேட்டை:-

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே ஜங்ஷன் அருகே பெரிய ஏரி உள்ளது.

தற்போது இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பிய நிலையில் மீன்கள் இனப்பெருக்க உற்பத்தி மூலம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை ஏரி கரையின் பகுதிகளில் ஆங்காங்கே பெரிய அளவிலான மீன்கள் செத்து மிதந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர் செத்து மிதந்து கிடந்த மீன்களை பார்வையிட்டு தற்போது மீன்களுக்கு அம்மை நோய் வந்திருப்பதாகவும். இதனால் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படும். எனவே மீன்களை பிடித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்களுக்கு ஆட்டோ மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.

Tags:    

Similar News