உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

Published On 2023-08-26 15:19 IST   |   Update On 2023-08-26 15:19:00 IST
  • கார் மீது லாரி மோதி வாலிபர் படுகாயம்
  • டிரைவரை கைது செய்ய கோரி போராட்டம்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி, எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனசிங் மகன் ஆனந்தவேல் (வயது 37). காங்கிரஸ் பிரமுகர்.

இவர் இன்று காலை தனது காரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த ஆனந்தவேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய கோரி வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட கட்சியினர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News