உள்ளூர் செய்திகள்
ஷெம்போர்டு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
- மாணவர்களிடம் புற்றுநோய் குறித்து விளக்கப்பட்டது.
- ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்:
வாணியம்பாடியை அடுத்தசின்னகல்லுபள்ளி அருகே உள்ள ஷெம்போர்டு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான புற்று நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
பொருளாளர் சாட்ஜிகுமார், துணை செயலாளர் சிங்கார வேலன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் டாக்டர் பிரசாந்த் வரவேற்றார்.
லக்னோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேரிங் சோல்ஸ் பவுண்டேசன் அமைப் பின் ஆற்காடு மண்டல திட்ட அலுவலர் ஜெனட் சுகுமார் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாளர் சிவா மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.