உள்ளூர் செய்திகள்
சென்னையில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரருக்கு பரிசு கோப்பை
- போலீஸ் இன்ஸ்பெக்டர் கைகளால் பெற்றுக் கொண்டார்
- போலீசார் உடனிருந்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் கிரிசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரவீன்குமாருக்கு என்பவர் சென்னையில் உள்ள ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோப்பையும் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதை வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பழனியிடம் கொடுத்து அவர் கைகளால் பெற்றுக் கொண்டார். அப்போது தனி பிரிவு போலீசார் மூர்த்தி மற்றும் போலீஸ் நிலைய போலீசார் உடன் இருந்தனர்.