உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.

வாணியம்பாடியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-21 15:49 IST   |   Update On 2022-12-21 15:49:00 IST
  • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத் குமார் ஆகியோர் தொடக்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடிவேல், மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் எஸ். பாரதிதாசன், பேரூர் கழக செயலாளர் சரவணன், சிவக்குமார், நாட்டறம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News