உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலை கரைத்த 2 வாலிபர்கள் மூழ்கி பலி

Published On 2023-09-21 15:55 IST   |   Update On 2023-09-21 15:55:00 IST
  • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
  • போலீசார் விசாரணை

ஆலங்காயம்:

நாட்டறம்பள்ளி தாயப்பன் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 24). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண் பர்களுடன் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைத்துள்ளார்.

பின்னர் நண்பர்களுடன் அணையின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றார்.அப்போது அவர் நீரில் மூழ்கினார். அதேபோன்று ஜோலார் பேட்டையை அடுத்த கோனேரிக்குப்பம் கிரா மத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் தனது உறவினர்கள், நண்பர்களுடன் அதே அணைப்பகுதியில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு கரையின் மீது சென்று கொண் டிருந்தார்.

அப்போது அணையில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.

இதனை கண்ட அங்கிருந்த வர்கள், நீரில் மூழ்கிய இருவ ரையும் காப்பாற்ற முயன்றனர். பூவரசனை மட்டுமே பிணமாக மீட்டனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீரில் மூழ்கிய முரளியை இரவு 7 மணி வரை தேடியும் மீட்க முடியவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் தேடலுக்கு பின்பு முரளியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News