உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம்

Published On 2022-08-09 14:34 IST   |   Update On 2022-08-09 14:34:00 IST
  • செயற்குழு கூட்டத்திற்கு முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
  • ஆண்டு விழா பொதுக்குழுவில் பயின்றோர் கழக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பயின்றோர் கழக ஆண்டு விழா வருகிற15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறுகிறது. அதில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனித்தனியாக நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பயின்றோர் கழக செயற்குழு கூட்டம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் ஜெயபோஸ், பொருளாளர் பகவதி பாண்டியன், இணைசெயலாளர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசிங் சாம்ராஜ், சித்திரைராஜா, ராஜன் ஆதித்தன், பாலமுருகன், மூகாம்பிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி ஆண்டு விழா பொதுக்குழுவில் பயின்றோர் கழக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தல், விழாவில் பயின்றோர் கழக உறுப்பினர்களை அதிகமாக பங்கேற்க வைத்தல், ஓய்வு பெற்ற மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் அலுவலர்களை பாராட்டுதல், கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடத்தி பரிசு வழங்குதல், பிற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை செப்டம்பரில் நடைபெறும் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், நிறுவன தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவில் நடத்துதல் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News