சிறுவாபுரியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது
- சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கம் ரூ.750-யை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
- மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் உள்ள அய்யனார் மேடு ஏரிக்கரை அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் நேற்று மதியம் அய்யனார் மேடு ஏரிக்கரை அருகே ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கம் ரூ.750-யை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் அய்யனார் மேடு பகுதியைச் சேர்ந்தவர்களான மேகநாதன்(வயது50), தேவராஜ்(வயது42), பாளையம்(வயது60) என தெரிய வந்தது. மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.