உள்ளூர் செய்திகள்

பஞ்சாயத்து தலைவர் ராமராஜ் தலைமையில் மனு அளிக்க வந்தவர்கள்.

சிவகிரி அருகே பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல்-நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

Published On 2023-08-29 14:20 IST   |   Update On 2023-08-29 14:20:00 IST
  • தேவிபட்டணம் ஊராட்சி தலைவர் ராமராஜ், கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தார்.
  • ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் யூனியன் தேவிபட்டணம் ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ராமராஜ் இருந்து வருகிறார். இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நான் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுவிட்டேன். அந்த சமயத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த நபர், காழ்புணர்ச்சியோடு தொடர்ச்சியாக என் மீது சாதிய தீண்டாமை செய்து வருகிறார். நான் படித்து வக்கீலாக உள்ளேன். எனக்கு இந்த நிகழ்வுகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

மேலும் ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நான் மறுக்கவே, எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். ஏற்கனவே என்னை அவர் சாதியை சொல்லி திட்டியதாக நான் சிவகிரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை சில காரணங்களால் வாபஸ் பெற்றேன். தற்போது மீண்டும் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தை நாடுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது தேவி பட்டணம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாடசாமி, வார்டு உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News