உள்ளூர் செய்திகள்

திரேஸ்புரம் பகுதியில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் தூய்மை பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.


தூத்துக்குடியை தூய்மையான மாநகராட்சியாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்- மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

Published On 2022-09-19 14:35 IST   |   Update On 2022-09-19 14:35:00 IST
  • திரேஸ்புரம்,விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியில் குப்பைகள் அகற்றப்பட்டது.
  • மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றினர்.

தூத்துக்குடி:

உலக கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில், தூய்மை பணியாளர்கள் கல்லூரி மாணவ -மாணவிகள் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் மெகா தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

28 டன் குப்பை அகற்றம்

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் திரேஸ்புரம்,விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியில் கடற்கரையோர பகுதிகளில் கிடந்த பாலிதீன் பேப்பர்கள்,பிளாஸ்டிக் கழிவுகள், சேதமாகி பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகள்,கயிறுகள், பேப்பர் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆலோசனையின்படி இதில் ஈடுபட்ட மாநகர நகர்நல அலுவலர் அருண் குமார்,உதவி ஆணையர் தனசிங்,சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்யநாதன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ஜெயசீலி, ஜெபஸ்டின்சுதா, பவானிமார்ஷல் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர்,பொதுச்சேவை நண்பர்கள் குழுவினர், அஜித் நற்பணி மன்றத்தினர், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் என 500-க்கும் மேற்பட்ட குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றினர்.

நிகழ்ச்சியின்போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கான அடிப்படைவசதிகளை முழுமையாக செய்து கொடுத்திட மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே 100 சதவீதம் மிகத் தூய்மை யான,சுத்தமான மாநகராட்சி தூத்துக்குடி என கூறும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் பூங்கா,பஸ் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மாநராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கிளினீங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதோடு பொது இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதை தவிர்த்திட நவீன வடிவிலான குப்பை தொட்டிகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து போடவேண்டும். இந்த நேரத்தில் மாநகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலு–மாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த தடை செய்யப்பட்ட பொரு ட்களின் பயன்பாடு பொது மக்களிடத்தில் இன்னும் குறையாமலே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, வணிகர்கள் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது.விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதாரமான குப்பை இல்லாத மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News