உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்கள்.

நிலக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

Published On 2023-09-16 06:58 GMT   |   Update On 2023-09-16 06:58 GMT
  • விநாயகர் சதுர்த்தியையொட்டி 32-ம் ஆண்டு வெற்றி முதல் நாள் நிகழ்ச்சி காப்புகட்டுதல், பால்குடம், முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • மதுரை திருமூலர் தவயோகி சிவகிரி மகரிஷிசுவாமிகள் திருமந்திரம் கூற பெண்கள் விநாயகர், அம்மனை வழிபட்டனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 32-ம் ஆண்டு வெற்றி முதல் நாள் நிகழ்ச்சி காப்புகட்டுதல், பால்குடம், முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

2-வது நாளாக நேற்று காளியம்மன் கோவில் வளாகத்தில் 303 பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை திருமூலர் தவயோகி சிவகிரி மகரிஷிசுவாமிகள் திருமந்திரம் கூற பெண்கள் விநாயகர், அம்மனை வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விஸ்வஹிந்துபரிசித், ஆன்மீக சேவாசங்க நிர்வாகிகள் மற்றும் சிலுக்குவார்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News