உள்ளூர் செய்திகள்

திருவாசகம் முற்றோதல் வழிபாடு நடந்தது.

ஐயாறப்பர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு

Published On 2022-11-04 08:20 GMT   |   Update On 2022-11-04 08:20 GMT
  • கயிலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
  • தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில் அமைந்துள்ளதால் வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றது.

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டது.மாமன்னன் ராஜராஜ சோழனின் மனைவி சோழமாதேவி தமது மன்னனின் வெற்றிகளுக்காகவும் தீர்க்காயுளுக்காகவும் வேண்டி மேற்கொண்ட ஆன்மீகச் சேவைப் பிரார்த்தனையின் பொருட்டு திருவையாறு ஐயாறப்பர் கோவில் வடக்குப் பிரகாரத்தில் கயிலாச நாதர் கோயிலைக் கட்டி, குடமுழுக்கு முதலிய திருப்பணிகளையும் செய்து வைத்துள்ளார். மேலும், பொன், பொருள் மற்றும் நிலம் முதலிய நிவந்தங்களையும் அளித்தார்.

இதன்பொருட்டு தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஐயாறப்பர் கோயில் வடகயிலாயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

சதயவிழாவை முன்னிட்டு வடகயிலை கயிலாச நாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

சிவனடியார் பழனிநாதன் தலைமையிலான வடகயிலைச் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் திருவாசகம் முற்றோதல் வழிபாடும், திருமுறைகள் பாடிய அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் ஞானசம்மந்தர் ஆகிய நான்கு சைவசமயக் குரவர்களின் திருவுருவப்பட வீதிஉலா நடந்தது.

அப்பர் காட்சி கண்ட தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில்அ மைந்துள்ளதால் இக் கயிலாசநாதர் கோயில் மற்றும் நந்தவனப் பகுதி வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வடகயிலைச் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News