உள்ளூர் செய்திகள்
ஜாதி சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
- வருவாய்த் துறையினர் சார்பில் நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள திருவள்ளுவர்நகர் பகுதியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு செங்கம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை தாசில்தார் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ஞானவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதற்கு கோரிக்கை மனுக்கள் அச்சமூகத்தை சார்ந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டது.
செங்கம் அடுத்த திருவள்ளுவர்நகர், கட்டமடுவு, நரடாபட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் ஜாதி சான்றிதழுக்காண கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் வருவாய்த் துறையினர் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.