பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்
கிரிவலம் வந்த பக்தர்கள் சாலை மறியல்
- போதுமான பஸ் வசதி இல்லாததால் ஆத்திரம்
- 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது
திருவண்ணாமலை:
கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து இல்லாததால் பெங்களூரு தற்காலிக பேருந்து நிலையம் முன்பு சந்தைமேடு அருகே கிரிவல பக்தர்கள் சாலை மறியல்
ஆனி மாத பௌர்ணமி நேற்று மாலை 7.46-க்கு தொடங்கி இன்று மாலை 5.46 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை பெங்களூர் திருச்சி சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கிரிவலப் பாதை செங்கம் சாலை சந்தைமேடு அருகே பெங்களூரு தற்காலிக பேருந்து நிலையம் முன்பு தர்மபுரி சேலம் ஓசூர் போன்ற பகுதிகளுக்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று அதிகாலை நீண்ட நேரமாக பஸ்சுக்கு காத்திருந்த பக்தர்கள் பறிதவித்தனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் சந்தைமேடு தற்காலிக பஸ் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.