வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
- 954 பேருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கணியம்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த மோத்தக்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று தமிழக முதல்-அமைச்சரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யாகமல் பிரசாத் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வனிதாகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோத்தக்கல் ஊராட்சி மன்ற தலைவர் உஷாஜெயவேலு வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெ.துரைராஜ் மேற்பார்வையில், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
சரக்கரை நோய், பல் மருத்துவம், குழந்தைகள் நலம், காசநோய், சித்த மருத்துவம், மனநோய் உள்பட 954 பேருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
மேலும் ஆறு பேர் தொடர் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளனர். இதில் ஊராட்சி துணை தலைவர் கமல்ராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.