உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் அ.தி.மு.க. பிரசார வாகனத்தை மாவட்ட செயலாளர்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் வரவேற்ற காட்சி.

மதுரை மாநாடு அ.தி.மு.க. பிரசார வாகனத்துக்கு வரவேற்பு

Published On 2023-08-15 13:49 IST   |   Update On 2023-08-15 13:49:00 IST
  • 20 -ந் தேதி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது
  • பிரச்சார வாகனத்துடன் பேரணியாக வந்தனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக எழுச்சி மாநாட்டு பிரச்சார வாகனத்திற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரையில் ஆகஸ்டு 20 -ந் தேதி அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

இதற்கான சிறப்பு பிரச்சார வாகனத்தின் பயணத்தை சேலத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை நகரில் உள்ள அறிவொளி பூங்கா முன்பு பிரச்சார வாகனத்திற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து முக்கிய வீதிகளின் வழியாக அதிமுகவினர் பிரச்சார வாகனத்துடன் பேரணியாக வந்தனர்.

அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பிருந்து மதுரை நோக்கிய பிரச்சார வாகனத்தின் பயணத்தை மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் செல்வம், மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், ஞானசவுந்தரி கனகராஜ் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சத்யசிவக்குமார், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கதர் சீனு, நகரமன்ற உறுப்பினர்கள் நரேஷ், சந்திரபிரகாஷ், பேரவை மாவட்ட துணைத்தலைவர் ரேடியோ ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் போர் மன்னன் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News