உள்ளூர் செய்திகள்
மணல் கடத்திய டிரெய்லர் பறிமுதல்
- டிராக்டருடன் தப்பியவருக்கு வலைவீச்சு
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி மேற்பார்வையில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் கள் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ண மங்கலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரின் டிராக்டரில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வந் துள்ளது. அதிகாரிகளை பார்த்ததும் மணல் ஏற்றிவந்தடிரெய் லரை கழற்றிவிட்டு டிராக்டரை ஜெகன் ஓட்டிச் சென்று விட்டார்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதன்பேரில் டிரெய்லரை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபு தீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.