கொள்ளை நடந்த கடையினை படத்தில் காணலாம்.
கடலூர் அருகே 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம்- பொருட்கள் திருட்டு : முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
- மொபைல் ஷாப் மற்றும் ஆயில் விற்பனை செய்யும் கடை, கார் ஒர்க்ஷாப் ஆகியவற்றின் பூட்டு உடைந்து கதவுகள் திறந்து கிடந்தன.
- த்தியை காட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.
கடலூர்:
கடலூர் அருகே காராமணிக் குப்பம் காளி கோவில் அருகே கடைகள் உள்ளன. நேற்று இரவு வழக்கம் போல் அனைத்து கடைகளையும் பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கடைகள் திறப்பதற்கு நேரில் வந்தனர். அப்போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதில் உள்ள மருந்து கடை , மொபைல் ஷாப் மற்றும் ஆயில் விற்பனை செய்யும் கடை, கார் ஒர்க்ஷாப் ஆகியவற்றின் பூட்டு உடைந்து கதவுகள் திறந்து கிடந்தன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு கடையாக உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமூடி கொள்ளையர்கள் கார் ஒர்க் ஷாப்பில் பாதுகாப்பு கருதி போடப்பட்டிருந்த கேமரா முழுவதும் உடைத்து உள்ளனர்.
மேலும் மருந்து கடையில் ஹார்லிக்ஸ் மற்றும் மாத்திரைகள், செல்போன் கடையில் செல்போன்கள், சார்ஜர், ஹெட்செட், ஆயில் கடையில் 4 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடையை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு, சாலையில் சென்ற மக்களை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. நெல்லிக்குப்பத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலில் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த நிலையில் சாலை ஓரத்தில் உள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.