உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
போடி அருகே தனியார் நிறுவனத்தில் மின்சாதன பொருட்கள் திருட்டு
- பண்ணைப்புரம் வள்ளுவர் தெருவில் செல்போன் டவர் மற்றும் அலுவலகம் அமைத்து பணியாற்றி வந்துள்ளனர்.
- 2 இடங்களிலும் புகுந்த மர்ம நபர்கள் செல்போன் டவர் பேட்டரிகள், ஜென ரேட்டர்கள், ஏ.சி. மற்றும் மின்சாதன பொருட்களை திருடிச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக ஜெயக்குமார் (வயது39) என்பவர் பணியாற்றி வருகிறார். போடி அம்மாபட்டி பகுதியை சேர்ந்த செல்வ க்குமார், பண்ணைப்புரம் வள்ளுவர் தெருவில் செல்போன் டவர் மற்றும் அலுவலகம் அமைத்து பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 இடங்களிலும் புகுந்த மர்ம நபர்கள் செல்போன் டவர் பேட்டரிகள், ஜென ரேட்டர்கள், ஏ.சி. மற்றும் மின்சாதன பொருட்களை திருடிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் இது குறித்து போடி தாலுகா மற்றும் கோம்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.