உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட நபர்கள் சோழபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

அடுத்தடுத்து 3 வீடுகளில் காப்பர் கம்பிகள் திருட்டு

Published On 2023-10-17 15:42 IST   |   Update On 2023-10-17 15:42:00 IST
  • திருட்டு சம்பவங்களை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சி.சி.டி.வி. கேமராக்க ளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த சோழபுரம் பாத்திமா நகரை சேர்ந்த லியாகத் அலி, ராஜா முகமது, அப்துல் பாசித் ஆகியோர் வீடுகளில் உள்ள ஏ.சி.யில் பொருத்தப்பட்டுள்ள காப்பர் கம்பிகளை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

வீடுகளில் ஆட்கள் இருந்தபோதே இந்த திருட்டு சம்பவம் நடந்து உள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தனர். பின்னர், தொடர் திருட்டு சம்பவங்களை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை யிலான சோழபுரம் போலீசார் திருட்டு நடந்த வீடுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து,

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்க ளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News