உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் ஆசிரியர் வீட்டில் 40 பவுன் திருட்டு கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் துப்பு துலக்கும் போலீசார்

Published On 2022-09-03 08:32 GMT   |   Update On 2022-09-03 08:32 GMT
  • வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.

திண்டிவனம் சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சசிவிக்குமார். இவர் கருவம்பாக்கம் அரசுப் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா. விழுக்கத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சசிவிக்குமார்தனது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் காலை பள்ளிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது, மேலும், அங்கிருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து ஆசிரியர் சசிவிகுமார்.ரோசனை போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார்அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுண ஏடிஎஸ்பி சோமசுந்தரம்,சப் இன்ஸ்பெக்டர்கள் தக்ஷிணாமூர்த்தி,கல்பனா காவலர் சரவணன் கொண்ட குழு வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர்.

கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனை கொள்ளையர்கள் துண்டித்து உள்ளனர். விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வர வைக்கப்பட்டுஅங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் திருவள்ளுவர் நகர் வரை சென்று நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது தவிர அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்

Tags:    

Similar News