உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் லாட்ஜில் தங்கிய தொழிலாளி மர்மச்சாவு

Published On 2022-09-09 15:10 IST   |   Update On 2022-09-09 15:10:00 IST
  • தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீசில் புகார் செய்தார்.
  • தொழிலாளியுடன் தங்கியிருந்த நண்பரை போலீஸ் ேதடுகிறது

மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கீழ் பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சையது முகமது மகன் முஸ்தபா (46). ஊட்டி டவுன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய அண்ணன் ஜெய்னுதீன்(50). திருமணம் ஆகி தனியாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மேட்டுப்பாளையம் வந்து தங்கி கூலி வேலை செய்தார்.

இந்தநிலையில் நேற்று காலை முஸ்தபாவின் உறவினர் அப்பாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உனது அண்ணன் ஜெய்னுதீன் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் இருப்பதாக தகவல் அளித்தார்.

உடனே முஸ்தபா மற்றும் அவருடைய அண்ணன் சலீம் ஆகியோர் மேட்டுப்பாளையம் வந்து அரசு மருத்துவமனை வந்து ஜெய்னுதீனின் உடலைப் பார்த்தனர்.

அப்பாஸிடம் விசாரிக்கையில், ஜெய்னுதீன் கடந்த 7 ந் தேதி அவருடன் வேலை செய்யும் ஊட்டியை சேர்ந்த ஜெயராம் என்பவருடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்.

மது குடித்துவிட்டு இரவு 10 மணிக்கு படிக்கட்டு அருகே படுத்திருந்தவர் படியிலிருந்து புரண்டு கீழே விழுந்து பின்பக்க தலையில் அடிபட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் முஸ்தபா மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனது அண்ணன் ஜெய்னுதீன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேட்டு ப்பாளையம் இ ன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெ க்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயினுதியுடன் தங்கி இருந்த ஜெயராமனை தேடி வருகின்றனர். மேலும் ஜெய்னுதீன் சாவு இயற்கையானதா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News