உள்ளூர் செய்திகள்

கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்.

கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம்

Published On 2022-09-27 08:59 GMT   |   Update On 2022-09-27 08:59 GMT
  • போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  • இச்சம்பவம் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்தனர்.

மெலட்டூர்:

தேவராயன்பேட்டை அருகே உள்ள பொன்மா ன்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் குமார், காமராஜ், உள்பட 4 தொழிலாளர்கள் திடீரென பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

மேலும் ஊழியர்கள் வேலை பார்த்த கூலியும் நிறுத்தப்ப ட்டுள்ளது.

இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் சார்பில் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மனோகர் தலைமையில் தேவராய ன்பேட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதி, தி.மு.க ஒன்றிய பிரதிநிதி குமார் உள்பட கிராமமக்கள் பலர் அரசு கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அலுவலர் சுரேஷ்குமார், பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டு மெனவும், அவர்களுக்கு வழங்க வேண்டி கூலி நிலுவை தொகையயையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதிகாரிகள் தரப்பில் இருந்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து கோட்ட மேலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் இச்சம்பவும் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்ததை போராட்ட குழுவினர் ஏற்றுகொண்டு காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News