உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
சிதம்பரத்தில் தடுப்பு கட்டையில் மோதி லாரி கவிழ்ந்தது
- சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது
- லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
கடலூர்:
சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.