உள்ளூர் செய்திகள்
பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை படத்தில் காணலாம்.
நத்தம் அருகே கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
- பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பொங்கல் வைத்தல், பூக்குழி இறங்குதல், கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது
- சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம்:
நத்தம் அருகே சேத்தூர் கிராமம் களத்துபட்டியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் முதல்நாள் அம்மன் ஊர்வலம், முளைப்பாரி, வானவேடிக்கைகள் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பொங்கல் வைத்தல், பூக்குழி இறங்குதல், கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை களத்துப்பட்டி, கன்னிமார்புரம், கல்லாத்துபாலம் ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.