உள்ளூர் செய்திகள்

மகளிர் தினவிழாவில் சபாநாயகர் அப்பாவு பேசிய போது எடுத்தபடம்.

அற்புதமான திட்டங்களை தந்து மகளிர் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு - சபாநாயகர் அப்பாவு பேச்சு

Published On 2023-03-20 14:26 IST   |   Update On 2023-03-20 14:26:00 IST
  • விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார்.
  • மகளிருக்கு அற்புதமான திட்டங்களை தந்து மகளிர் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவருகிறது தமிழக அரசு என்று பேசினார்.

வள்ளியூர்:

வள்ளியூர் டி.டி.என்.கல்விக்குழுமங்களின் நேரு நர்ஸிங் கல்லூரி, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி, மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் சார்பில் மகளிர் தினவிழா மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவுக்கு டி.டி.என்.கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் செய லாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். டி.டி.என்.கல்வி குழுமங்களின் தலைவர் டி.லாரன்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் அதற்கு திராவிட இயக்க ங்களின் தியாகமும், திட்டங் களும் தான் காரணம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் வரையில் மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தந்துள்ளார். பெண்கள் தான் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது.

பெண்களுக்கு கட்டண மில்லா பேருந்தை தந்தவர் நமது முதல்-அமைச்சர். இன்னும் வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்பார்க்கலாம். பெண் காவலர்களுக்கு சலுகைகள் இப்படி பெண்களுக்காக சலுகைகள், திட்டங்களை வழங்கி வருவதால் தான் தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. என இந்தியாவி லுள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் தெரிவிக்கிறார்கள். இப்படி மகளிருக்கு திட்டங்களை தந்து மகளிர் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவருகிறது தமிழக அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி பேசினார்.

அதனைத் தொடர்ந்து காலையில் நேரு நர்ஸிங் கல்லூரியில் நடைபெற்ற கோலப்போட்டி, மெகந்தி போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பெருமாள், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், சென்னை வேளாண்மைத்துறை துணை இயக்குனரும் டி.டி.என்.கல்வி குழுமத்தின் பொருளாளருமான ஸ்டேன்லி, கல்லூரி நிர்வாக அலுவலர் அலெக்ஸண்டர், நேருநர்ஸிங் கல்லூரி முதல்வர் எஸ்.மார்க்கரெட் ரஞ்சிதம், துணை முதல்வர் பேபி உமா, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி.சுரேஷ் தங்கராஜ் தாம்சன், நேரு மருத்துவனை மகப்பேறு மருத்துவர் டியாவிலின் மெடோனா, அரசு வக்கீல் முத்துகிருஷ்ணன், கிங்க்ஸ் பள்ளிகளின் மக்கள் தொடர்பு அலுவலர் ரேகா முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் வேலைக்கு செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகு கிறதா, குறைகிறதா என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்தி ருந்தனர். மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ஆர்.கிளாடிஸ் லீமா ரோஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News