உள்ளூர் செய்திகள்

கீழே கிடந்த செல்போனை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சமூக அலுவலர்

Published On 2023-02-09 09:36 GMT   |   Update On 2023-02-09 09:36 GMT
  • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் கீழே கிடந்தது.
  • செல்போனை யாரோ தவற விட்டு சென்று விட்டார்கள்.

குனியமுத்தூர்,

கோவை பொள்ளாச்சி ரோடு ஆத்துப்பாலத்தை அடுத்த குறிச்சி பிரிவு அருகே சுந்தராபுரம் காமராஜர் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் பாசறை ரமேஷ் என்பவர் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் கீழே கிடந்தது. உடனே அதனை எடுத்துப் பார்த்தார். இதனையடுத்து செல்போனை யாரோ தவற விட்டு சென்று விட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அவர் நேரடியாக போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணனிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் செல்போனை தவறவிட்ட நபரை குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் குனியமுத்துரை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட நபரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் முன்னிலையில் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. செல்போனை பெற்றுக் கொண்ட அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து கீழே கிடந்த செல்போனை எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த சமூக ஆர்வலர் பாசறை ரமேசை போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரை கண்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News