உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும்- பா.ஜ.க கோரிக்கை

Published On 2023-07-03 15:00 IST   |   Update On 2023-07-03 15:00:00 IST
  • கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
  • கோவை மாவட்டம் முழுவதும் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. அப்போது கோவை தெற்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் புகார்மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவையில் கிரஷர் மற்றும் கல்குவாரி நிறுவ னங்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பல லட்சம் கூலி தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

இதற்கிடையே கோவையில் உற்பத்தியாகும் கனிம வளங்களில் 90 சதவீதம், முறைகேடாக கேரளாவிற்கு கடத்தபட்டு விற்கப்பட்டு வருகிறது.

இதை கண்டித்து கிரசர் மற்றும் கல்குவாரி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.

எனவே அரசு உடனடியாக கிரசர் மற்றும் கல்குவாரி, லாரி உரிமையா ளர்களுடன் பேச்சுவா ர்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்தி செல்வதை தடுக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News